இரட்டை மகிழ்ச்சியில் நயன்தாரா..! விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாஸ் தகவல்..!

Published : Oct 23, 2021, 03:44 PM IST
இரட்டை மகிழ்ச்சியில் நயன்தாரா..! விக்னேஷ் சிவன் வெளியிட்ட மாஸ் தகவல்..!

சுருக்கம்

நயன்தாரா (Nayanthara) - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தயாரிப்பில் உருவாகி இருக்கும் கூழாங்கல் (Pebbles) திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.  

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.  இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான 'கூழாங்கல்' படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஏற்கனவே நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதை தட்டிச் சென்றது. இந்த விழாவிற்கான தேர்வின் போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பரியமான வேஷ்டி புடவையில் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

மேலும் செய்திகள்: குட்டை டவுசரில் குதூகல கிளாமர்... வயசுக்கு மீறிய உடையில் அட்ராசிட்டி பண்ணும் அனிகா! ரொம்ப ஓவராதான் போறாங்களோ..

 

பின்னர் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் IFFSA டொரண்டோ விழாவுக்கு கூழாங்கல் படத்தை தேர்வு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நேற்றைய தினம் 'கூழாங்கல்' திரைப்படம் பிரேசிலில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளது தகவல் வெளியானது.

மேலும் செய்திகள்:வழக்கு தொடர்வதை விட இப்படி செய்திருக்கலாம்! சமந்தாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் நச் பதில் கொடுத்த நீதிபதி

 

ஆனால் அதை விட மாஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதாவது நயன் - விக்கி தயாரித்துள்ள 'கூழாங்கல்' திரைப்படம், ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் வெளிநாட்டு மொழி பிரிவில் ஏற்கனவே யோகி பாபுவின் மண்டேலா படம் உள்ளிட்ட 14 படங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலையில் இந்த பட்டியலில் தற்போது 'கூழாங்கல்' படமும் இடம்பிடித்துள்ளது. இதனால் நயன்தாரா இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளாராம்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!