
நடிகர் மன்சூர் அலிகான் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு மண்ணை அபகரித்து வீடு கட்டியதற்காக அவரது வீட்டுக்கு அரசு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர் என்றால் பலரது நினைவிற்கும் முதலில் வருபவர் மன்சூர் அலிகான் தான். பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். அதன் பின்னர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.
மேலும் செய்திகள்: அல்டரா மாடர்ன் உடையில்... இளம் ரசிகர்களை ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வேற லெவல் போட்டோஸ்..!
திரையுலகை கடந்து அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் கூட போட்டியிட்டு தோல்வி கண்டார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார். தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.
மேலும் செய்திகள்: அட கடவுளே... சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து இந்த ஹீரோவும் வெளியேறுகிறாரா? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்...
மேலும் நடிகர் விவேக் மரணம் குறித்தும், கொரோனா தடுப்பு மருந்து குறித்தும் அவதூறு பரப்பியதற்காக மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய மன்சூர் அலிகானுக்கு, தடுப்பு மருந்து குறித்து கருந்து தெரிவிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது அனைவருமே அறிந்தது தான்.
மேலும் செய்திகள்: பட்டு சேலை மீது பக்கா ஸ்டைலிஷான தங்க நிற கோட்... வித்தியாசமான அவுட் ஃபிட்டில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்..!
அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் இவர், தற்போது அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதற்காக இவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மன்சூர் அலிகானுக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளது. அந்த வகையில் சூளைமேடு, பெரியார் பாதையிலும் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை கட்டுவதற்கு சுமார் 2500 சதுரடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து கட்டியுள்ளார் மன்சூர் அலிகான். இதனால் தற்போது இவரது வீட்டிற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் அரசு அதிகாரிகள். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.