உதயநிதியுடன் போனி கபூர் திடீர் சந்திப்பு..! வைரலாகும் புகைப்படம்..!

Published : Oct 22, 2021, 07:48 PM IST
உதயநிதியுடன் போனி கபூர் திடீர் சந்திப்பு..! வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

பிரபல தயாரிப்பாளரும் (Producer), சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதியை (Udhayanidhi)  அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் (boney kapoor) இன்று திடீர் என சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

பிரபல தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதியை அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் இன்று திடீர் என சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்து, பின்னர் நடிகராக மாறியவர் உதயநிதி. சமீபத்தில் நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதே நேரத்தில் திரைப்படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: அட கடவுளே... சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து இந்த ஹீரோவும் வெளியேறுகிறாரா? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்...

 

இந்நிலையில் உதய நிதியை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர் நட்பு ரீதியாக இன்று சந்தித்து பேசியுள்ளார். தமிழில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகள்: அல்டரா மாடர்ன் உடையில்... இளம் ரசிகர்களை ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வேற லெவல் போட்டோஸ்..!

 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஹாலிவுட் லெவலில் கெத்து காட்டியுள்ளார் அஜித் என்பது இதற்க்கு முன்பு வந்த முன்னோட்ட வீடியோக்கள் மூலமாகவே தெரிந்தது. உதய நிதியுடன்  தற்போது நட்பு ரீதியாக போனி கபூர் சந்தித்திருந்தாலும், வரும் காலத்தில் உதயநிதி இவர் தயாரிப்பில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். தற்போது உதயநிதி போனி கபூருடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!