நடிகர் சூர்யா (Suriya) முதல் முறையாக கருப்பு கோட் அணிந்து, வக்கீலாக நடித்துள்ள 'ஜெய் பீம்' (Jai bhim) திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
நடிகர் சூர்யா (Suriya) முதல் முறையாக கருப்பு கோட் அணிந்து, வக்கீலாக நடித்துள்ள 'ஜெய் பீம்' (Jai bhim) திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
சூர்யா அறிமுக இயக்குநர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் வக்கீல் கெட்டப்பில் இருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகியது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.
undefined
மேலும் செய்திகள்: போதை பொருள் வழக்கில் சிக்கியதால் விஜய் படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டாரா அனன்யா பாண்டே?
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கும், அவளது குடும்பத்திற்கும் போலீசாரால் ஏற்படும் பிரச்சனையும், அநீதிகளையும் சட்ட போராட்டத்தின் மூலம் போராடி, நியாயம் வாங்கி கொடுக்கும் ஒரு வக்கீலாக நடித்து கெத்து காட்டியுள்ளார் சூர்யா.
மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரோஷ்னி..? தீயாக பரவும் காரணம்..!
கடந்த வாரம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. "ட்ரைலரின் ஆரம்பத்திலேயே கோர்ட் வாசலில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என, கர்ச்சித்த குரலோடு சூர்யா என்ட்ரி கொடுத்துள்ளார். சட்டம் என்பது மிகவும் வலிமையான ஆயுதம், யாரை காப்பாற்ற அதை பயன்படுத்துகிறோம் என்பதில் உள்ளது என, ஆணித்தனமான சூர்யாவின் கருத்துக்கள் கவனிக்கப்படும் விதத்தில் உள்ளது.
மேலும் செய்திகள்: கண்ட இடத்தில் கணவர் நினைவாக சமந்தா குத்திக்கொண்டு டாட்டூ... சீக்ரெட்டை வெளிப்படுத்தும் வைரல் போட்டோஸ்..!
1995 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை நகர்கிறது. பழங்குடியின மக்கள் இயற்க்கை எழில் கொண்ட இடத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள அவர்களுக்கு வோட்டர் ஐடி, தங்கும் இடத்திற்கு பட்டா, ரேஷன் கார்டு இல்லாமல் ஒதுக்கப்பட்ட மக்களாகவே இருக்கும் அவலங்களையும் இந்த ட்ரைலர் தோலுரிக்கிறது.
மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? வெள்ளை நிற கோட் மட்டும் போட்டு வேற லெவல் கிளாமரில் கலக்கும் குட்டி நயன் அனிகா!
அதே நேரத்தில் இந்த அப்பாவி மக்களை போலீஸ் காரர்கள் எப்படி கொடுமை படுத்தி, சுயநலத்திற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதும் காட்டப்படுகிறது. இப்படி பொய் வழக்கால் ஜெயிலில் சிறைவைக்கப்படும் கணவனை மீட்க, சூர்யாவின் உதவியோடு போராடும் பெண்ணின் கதை தான் இந்த படம். அரசாங்கமே இந்த வழக்கிற்கு எதிராக இருந்தாலும் இந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நின்று போராடியுள்ளார் சூர்யா. அவர் பேசும் ஒவ்வொவரு வசனங்களும் மனதில் பதிகிறது. பார்ப்பவராளின் நாடி நரம்புகளை தூண்டும் விதத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
மேலும் செய்திகள்: நயன்தாரா திருமண தேதி முடிவு செய்யப்பட்டதா? கல்யாணத்திற்கு விக்னேஷ் சிவன் இப்படி ஒரு சாங்கியம் செய்கிறாரா..
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். பழங்குடியின பெண்ணாக லிஜோ மோல் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தற்போது இந்த ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.