நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்..! உச்ச கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடிகள்..!

Published : Oct 22, 2021, 04:31 PM IST
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்..! உச்ச கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடிகள்..!

சுருக்கம்

நயன்தாரா (Nayanthara) - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தயாரிப்பில் உருவாகி இருக்கும் கூழாங்கல் (Pebbles) படத்திற்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.  

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கூழாங்கல் படத்திற்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.  இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான 'கூழாங்கல்' படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: பட்டு சேலை மீது பக்கா ஸ்டைலிஷான தங்க நிற கோட்... வித்தியாசமான அவுட் ஃபிட்டில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்..!

இந்த படம் ஏற்கனவே நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதை தட்டிச் சென்றது. இந்த விழாவிற்கான தேர்வின் போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பரியமான வேஷ்டி புடவையில் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

மேலும் செய்திகள்:பேன்ட் போட மறந்துடீங்களா? வெள்ளை நிற கோட் மட்டும் போட்டு வேற லெவல் கிளாமரில் கலக்கும் குட்டி நயன் அனிகா!

 

பின்னர் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் IFFSA டொரண்டோ விழாவுக்கு கூழாங்கல் படத்தை தேர்வு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது மேலும் நயன் - விக்கியை மகிழ்ச்சியாகும் வகையில் இந்த படத்திற்கு மற்றொரு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்:விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? மத்திய அரசின் ஆய்வு குழு வெளியிட்ட பரபரப்பு விளக்கம்..!

 

'கூழாங்கல்' திரைப்படம் பிரேசிலில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளது. தாங்கள் தயாரித்த கூழாங்கல் படத்திற்கு சர்வதேச அளவில் அடுத்தடுத்து அங்கீகாரம் கிடைத்து வருவதால் நயனும், விக்கியும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனராம்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?