
இந்த வருடத்திற்கான ஆஸ்கர் பட்டியலில், பிரபல காமெடி நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் இடம் பிடித்திருப்பது மிகப்பெரிய பெருமையாகவே பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலக அளவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையை சார்ந்த ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். இதனை பலமுறை பிரபல நடிகர் பார்த்திபன் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆஸ்கர் விருதை பெரும் முயற்சியில் தான் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மிகவும் வித்தியாசமான இயக்கியும், தயாரித்தும் வருகிறார்.
மேலும் செய்திகள்: விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? மத்திய அரசின் ஆய்வு குழு வெளியிட்ட பரபரப்பு விளக்கம்..!
மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? வெள்ளை நிற கோட் மட்டும் போட்டு வேற லெவல் கிளாமரில் கலக்கும் குட்டி நயன் அனிகா!
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில், சிறந்த படங்களை தேர்வு செய்து அதிலிருந்து வேற்றுமொழிக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தமிழில் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது பட்டியலில் நடிகர் யோகி பாபு நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான 'மண்டேலா' படம் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆஸ்கர் விருதை இந்திய பிரபலங்களான ஏ ஆர் ரகுமான், ரசூல் பூக்குட்டி, போன்ற ஒருசிலரே பெற்றுள்ள நிலையில் நடிகர் யோகி பாபுவின், இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.