
ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது வரை பாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது பிரபல இளம் நடிகையின் வீட்டில் NCB அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: மகன் ஆர்யன் கானை சந்தித்து பேசிய நிலையில்... ஷாருகான் வீட்டில் போதை பொருளை தடுப்பு அதிகாரிகள் விசாரணை!
பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான், மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் நண்பர்களுடன் போதை பொருள் பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த NCB அதிகாரிகளிடம் ஆர்யன் கான் கடந்த சில வருடங்களாகவே போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். எனினும் கப்பலில் இவரிடம் இருந்து எந்த போதை பொருளும் கைப்பற்றப்பட்ட வில்லை.
மாறாக இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சிலரிடம் இருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்ற பட்டது. தீவிர விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 8 ஆம் தேதி மும்பையில் உள்ள ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானுக்கு பல முறை ஜாமீன் கேட்டு, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்ட போதும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்:'பாண்டியன் ஸ்டோர்' தொடரில் இருந்து விலகுகிறாரா காவியா? அவருக்கு பதில் நடிக்க இந்த விஜய் டிவி பிரபலமா..!
தற்போது மும்பையில் உள்ள ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மகன் ஆர்யன் கானை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஷாருகானின் குடும்பத்தினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், மகனின் ஜாமீனுக்காக உயர் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர். மேலும் ஷாருகான் இன்று காலை தன்னுடைய மகனை ஆதார் சாலை சிறையில் சென்று சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
மேலும் செய்திகள்:' என்ன ஆச்சு? ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை... பரிதாப நிலையில் குண்டு கல்யாணம்..!
இன்று காலை ஷாருகான் ஆர்யனை சந்தித்து பேசிய நிலையில், திடீர் என அவரது வீட்டிற்கு சென்று போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபல பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் NCB அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அதுமட்டும் இன்றி இன்று மாலை 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் கொடுத்து ஷாக் கொடுத்துள்ள சம்பவம் தற்போது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.