அன்பான மதுரை மக்களே... நடிகை சினேகா வைத்த மிக முக்கிய கோரிக்கை..! வைரல் வீடியோ..!

Published : Oct 21, 2021, 03:35 PM IST
அன்பான மதுரை மக்களே... நடிகை சினேகா வைத்த மிக முக்கிய கோரிக்கை..! வைரல் வீடியோ..!

சுருக்கம்

மதுரை மக்களின் நலன் கருதி நடிகை சினேகா (Actress sneha) வெளியிட்டுள்ள வீடியோ (video) ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

மதுரை மக்களின் நலன் கருதி நடிகை சினேகா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாவது அலையால், பொதுமக்கள், பெரிய பெரிய நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. சிறு , குறு தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த பலர் ஒரேயடியாக இழுத்து மூடும் அளவிற்கு தள்ளப்பட்டனர்.

மேலும் செய்திகள்: இந்த வாரம் மிக குறைவான வாக்குகளை பெற்ற 3 பிக்பாஸ் போட்டியாளர்கள்..! யார் யார் தெரியுமா?

 

ஒருவழியாக மத்திய மற்றும் மாநில அரசின் தீவிர நடவடிக்கையால் தற்போது மீண்டும் மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். அதே நேரம் மீண்டும் கொரோனா 3 ஆவது அலை தாக்குமோ என்கிற பயமும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்:என்ன ஆச்சு? ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை... பரிதாப நிலையில் குண்டு கல்யாணம்..!

 

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாது, என உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆனால், கண்டிப்பாக உயிர் சேதங்களை தவிர்க்கலாம் என கூறுகிறார்கள் மருத்துவர்கள். பலர் தடுப்பூசியின் மீது இருந்த பயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும், சிலர் தற்போது வரை தடுப்பூசி போட்டு கொள்வதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 'பாண்டியன் ஸ்டோர்' தொடரில் இருந்து விலகுகிறாரா காவியா? அவருக்கு பதில் நடிக்க இந்த விஜய் டிவி பிரபலமா..!

 

இந்நிலையில் பிரபல நடிகை சினேகா, மதுரை மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அவர் கூறியுள்ளதாவது,"தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், எனவே மதுரை மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்".

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!