நான் கடவுளும் இல்லை... உன்ன மாதிரியும் இல்லை..! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபாஸின் 'ராதே ஷியாம்' டீசர்!

Published : Oct 23, 2021, 11:38 AM IST
நான் கடவுளும் இல்லை... உன்ன மாதிரியும் இல்லை..! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபாஸின் 'ராதே ஷியாம்' டீசர்!

சுருக்கம்

வம்சி, (Vamsi) பிரமோத், (Pramod) தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் (Radha Krishna Kumar)  இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' (Radhe Shyam) படத்தின் டீசர் சற்று முன்னர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.  

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும், படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு முழு, பிரபாஸ் நடிப்பில் இந்த படம் முழு காதல் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் 'ராதே ஷியாம்' படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23, அதாவது இன்றைய தினம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.

பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும். என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது வெளியாகியுள்ள 'ராதே ஷியாம்' டீசர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல்..! அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்ததால் அதிரடி நடவடிக்கை..!

 

டீச்சரின் ஆரம்பத்திலேயே... "நீ யார் என்று எனக்கு தெரியும், ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன்...  என்கிற வசனத்துடன் துவங்குகிறது. பின்னர் பிரபாஸ் பெரிய மாளிகையில் படுத்து கொண்டு, உன் இதயம் உடையும் சத்தம் எனக்கு கேட்கும் ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன்... உன் தோல்வியை என்னால் பார்க்க முடியும் ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன், உன் மரணத்தின் வாசனையை என்னால் நுகர முடியும் ஆனால் உன்னிடம் சொல்ல மாட்டேன். எனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் சொல்ல மாட்டேன் என தொடர்ந்து  ஒரு சஸ்பென்ஸ் நீடிக்கும்படி ஆங்கிலத்தில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது".

மேலும் செய்திகள்: கண்ட இடத்தில் கணவர் நினைவாக சமந்தா குத்திக்கொண்டு டாட்டூ... சீக்ரெட்டை வெளிப்படுத்தும் வைரல் போட்டோஸ்..!

 

தொடர்ந்து பேசும் பிரபாஸ்... ஏன்னா உன்னால புரிஞ்சிக்க முடியாது. " என் பெயர் விக்ரமாதித்யா நான் கடவுளும் இல்லை உன்னை மாதிரியும் இல்லை... ரேகை கணிதன் விக்ரமாதித்யா, என்கிற வார்த்தைகளோடு இந்த டீசர் முடிகிறது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் சிறப்பு டீசர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!