என் கண்களின் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன்! தேசிய விருது பெற்ற கலை இயக்குனருக்கு பாரதிராஜா இரங்கல்!

By manimegalai aFirst Published Dec 14, 2020, 12:35 PM IST
Highlights

பாரதி ராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில், கலை இயக்குனராக பணியாற்றி... மூன்று முறை தேசிய விருதை பெற்ற ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு சென்னையில் காலமானார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 

பாரதி ராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில், கலை இயக்குனராக பணியாற்றி... மூன்று முறை தேசிய விருதை பெற்ற ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு சென்னையில் காலமானார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி 1975 ஆம் ஆண்டு 'ஹம்சகீதே' என்கிற படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார். இதை தொடர்ந்து, மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களை தேர்வு செய்து, அதில் கலை இயக்குனராக பணியாற்றிவந்தார். எனவே, இவர் பணியாற்றிய 45 வருடங்களில் 50 திற்கும் குறைவான படங்களுக்கு மட்டுமே கலை இயக்குனராக இருந்துள்ளார்.

தமிழில், பிரசாந்த் நடித்த வண்ண வண்ண பூக்கள், பாரதி ராஜா இயக்கிய 'தமிழ்ச்செல்வன்', 'பசும்பொன்', 'தாஜ்மஹால் சுஹாசினி இயக்கிய 'இந்திரா', வடிவேலு நடிப்பில் வெளியான, 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' , 'சங்கமம்', 'நான் கடவுள்' உள்ளிட்ட தனித்துவமான படங்களுக்கு மட்டுமே இவரது பங்காளிக்கு இருக்கும்.

மேலும் செய்திகள்: குட்டி நயன்தாரான்னா சும்மாவா?... இந்த வயசிலேயே ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு போஸ் கொடுத்த அனிகா...!
 

கடைசியாக 2014 ஆம் ஆண்டு கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று படமான 'ராமானுஜம்' படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின்னர் வயது மூப்பு காரணமாக எந்த படங்களிலும் அவர் பணியாற்றவில்லை.

இந்நிலையில், உடல்நல பிரச்சனை காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் நேற்று இரவு காலமானார். இவரது இறுதி சடங்கு ... இன்று மதியம் 12 மணிக்கு சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: வெளிப்படையாக நடக்கும் நாமினேஷன்...! ரியோவை வச்சு செய்யும் போட்டியாளர்கள்..!
 

மேலும் இவருடன் பணியாற்றிய பலர் தகளுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் இயக்குனர் பாரதி ராஜா, ட்விட்டர் பக்கத்தில், 

என் கலைதுறையில்
என் கண்களில்
என் இன்னொரு
உணர்வை இழந்திருக்கிறேன்.
கிருஷ்ணமூர்த்தியின்
மறைவு நம்ப முடியா ஒன்று...
வாடிதவிக்கும் அவரது
குடும்பத்தினருக்கு
என் ஆழ்ந்த இரங்கலை 
தெரிவித்துக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
 

click me!