Jawan poster : அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தின் போஸ்டரை வைத்து விழிப்புணர்வு மீம் ஒன்றை போலீசார் உருவாக்கி உள்ளனர்.
கோலிவுட்டில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும்.
மேலும் இப்படத்தில் பிரியாமணி, சானியா ஐய்யப்பன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
undefined
இப்படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீஸ் பண்ண உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜவான் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில் முகத்தில் பேண்டேஜ் சுற்றியபடி நடிகர் ஷாருக்கான் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், அந்த போஸ்டரை வைத்து விழிப்புணர்வு மீம் ஒன்றை போலீசார் உருவாக்கி உள்ளனர். பைக்கில் ஹெல்மெட் அணியாமல் போனால் இப்படித்தான் ஆகும் என ஷாருக்கானின் புகைப்படத்தை ஒப்பிட்டு மீம் போட்டு உள்ளனர். நாக்பூர் போலீசாரின் இந்த விழிப்புணர்வு மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... குருவை மிஞ்சிய சிஷியன்... ரஜினி படத்தின் ஆல்டைம் ரெக்கார்டை அடிச்சுதூக்கியது சிவகார்த்திகேயனின் டான்