விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்தது ஏன்? - சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்

Published : Jun 06, 2022, 10:10 AM ISTUpdated : Jun 06, 2022, 10:42 AM IST
விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்தது ஏன்? - சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்

சுருக்கம்

Vikram Vedha Hindi remake : விக்ரம் - வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான காயத்ரி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். 

தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விக்ரம் வேதா. மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் மாதவன் விக்ரமாகவும், விஜய் சேதுபதி வேதாவாகவும் போட்டி போட்டு நடித்து அசத்தி இருந்தனர்.

தமிழில் ஹிட்டான இப்படம் தற்போது தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தையும் புஷ்கர் - காயத்ரி தான் இயக்குகின்றனர். இப்படத்தில் விக்ரமாக சையிப் அலிகானும், வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விக்ரம் - வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான காயத்ரி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது : விக்ரம் வேதா படம் 2017-ம் ஆண்டு தமிழில் ரிலீசானதும், எங்களுக்கு முதல் ஆளாக போனில் அழைத்து வாழ்த்து சொன்னது ஹிருத்திக் ரோஷன் தான்.

அந்த கதையின் தன்மை அவருக்கு புரிந்திருந்ததை எங்களால் உணர முடிந்தது. அதனால் அவரை நடிக்க வைத்ததாக கூறிய அவர், இப்படம் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக குறிப்பிட்டார். ஹிருத்திக் ரோஷனை பொறுத்தவரை எந்தவித ஈகோவும் இல்லாத மனிதர், நாம் எது சொன்னாலும் கேட்டுக்கொண்டு நடித்துக் கொடுப்பார்” என காயத்ரி பாராட்டி உள்ளார்.

இதையும் படியுங்கள்... வேற வழியில்ல... அனிருத்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - விருது விழாவில் ஓப்பனாக சொன்ன அரபிக் குத்து பாடகி

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்