SRK tests COVID-19 Positive : பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு கொரோனா… கவலையில் ஆழ்ந்த அவரது ரசிகர்கள்!!

By Narendran S  |  First Published Jun 5, 2022, 9:37 PM IST

Shah Rukh Khan tests positive for COVID-19 : பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் மகராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்பையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிதாக யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை.

Latest Videos

இந்த நிலையில் பாலிவுட் நடிகர்களில் மிகவும் பிரபலமான நடிகரான ஷாரூக்கான் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஷாருக்கான் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஷாருக்கான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இருதினங்களுக்கு முன் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ந் தேதி வெளியாக உள்ள நிலையில் ஷாருக்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அட்லீ மிகவும் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் பதான் திரைப்படம் ஜனவரி 2023 இல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நடிக்க உள்ளார். இந்த படம் டிசம்பர் 2023 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

click me!