
சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி அஜித், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து பிரபலமான உதயநிதி, கடந்த 2012-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி.
இதையடுத்து இது கதிவேலன் காதல், மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த உதயநிதி கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகைசூடி எம்.எல்.ஏ. ஆனார்.
இதையடுத்து அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவெடுத்த உதயநிதி, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளதாக சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் தான அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று நெஞ்சுக்கு நீதி படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம், சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த உதயநிதி, சமூகப் பொறுப்புள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புவதாகவும், அது போன்ற படங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார். மேலும் தன்னுடைய தாத்தா கருணாநிதி, சினிமா - அரசியல் என இரண்டு துறையிலும் பயணித்ததைப்போல் தானும் பயணிப்பேன், பயணித்து வருகிறேன் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்... Udhayanidhi Stalin : பிக்பாஸ்-ல ஜெயிச்சா பெரிய ஆளா... ஆரியின் செயலால் கடுப்பான உதயநிதி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.