Udhayanidhi Stalin : பிக்பாஸ்-ல ஜெயிச்சா பெரிய ஆளா... ஆரியின் செயலால் கடுப்பான உதயநிதி

Published : Jun 05, 2022, 12:27 PM ISTUpdated : Jun 05, 2022, 12:33 PM IST
Udhayanidhi Stalin : பிக்பாஸ்-ல ஜெயிச்சா பெரிய ஆளா... ஆரியின் செயலால் கடுப்பான உதயநிதி

சுருக்கம்

Udhayanidhi Stalin : அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் பிக்பாஸ் ஆரி.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளரக கலந்துகொண்டவர் ஆரி. இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டில் வின்னராகவும் வெற்றிவாகை சூடினார் ஆரி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஆரிக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் அலேகா, பகவான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ஆரி, சேரன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதுதவிர அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் ஆரி.

அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படம் இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கடந்த மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது.

அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உதயநிதி, ஆரி குறித்து பேசுகையில், பிக்பாஸ் முடிந்ததும் ஆரியை எனது வேறொரு படத்தில் நடிக்க கேட்பதற்காக போன் போட்டேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பலமுறை அழைத்தும் எடுக்காததால் ‘பிக்பாஸ்-ல ஜெயிச்சா அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுவாங்களானு’ கடுப்பாகிவிட்டேன். பின்னர் ஒரு நாள் அவரே போன் போட்டு பேசினார். அதற்குள் அந்த படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துவிட்டதால் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிக்க ஓகே வானு கேட்டேன். உடனே சம்மதம் சொல்லி நடித்தார்” என கூறினார்.

இதையும் படியுங்கள்... Rolex சூர்யாவுக்கே டஃப் கொடுப்பார் போல... அஜித்தின் வில்லன் கெட்-அப் பார்த்து மெர்சலான ரசிகர்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!