இதுவரை இல்லா புது தோற்றத்தில் கோவைசரளா..வெளியானது 'செம்பி' பட டிரைலர்

Kanmani P   | Asianet News
Published : Jun 04, 2022, 03:48 PM IST
இதுவரை இல்லா புது தோற்றத்தில் கோவைசரளா..வெளியானது 'செம்பி' பட டிரைலர்

சுருக்கம்

மைனா புகழ் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் செம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது . டிரைலரை பிரபல இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார்.

மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து  ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வில்லேஜ் கதைகளால் ரசிகர்களை கவர்ந்தவர்  இயக்கிவர் பிரபு சாலமன். கயலுக்கு பிறகு இவரது படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை. கடைசியாக வெளியான தனுஷின் தொடரி மற்றும் காடன் ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. இதையடுத்து தற்போது  பிரபு சாலமன் ஹீரோ, ஹீரோயின் இன்றி ஒரு படத்தை இயக்கி உள்ளார். செம்பி என பெயரிட்டுள்ளனர். 

கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  வழக்கமாக காமடி ரோலில் ரசிகர்களை ,மகிழ்வித்து வந்த இவர் செம்பியில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை பார்த்திராத புதிய வேடத்தில் அவர் நடித்துள்ளாராம். கோவை சரளாவுடன் குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ளார். 

இந்நிலையில்  செம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது . டிரைலரை பிரபல இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார்.

செம்பியின் உலகத்தை சிந்தனைமிக்க மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் காட்டுகிறது. ட்ரெய்லரைப் பார்க்கும்போது, ​​முக்கியமாக படம் பேருந்தையும் அதனுடன் பிணைக்கப்பட்ட வாழ்க்கையையும் சுற்றி வரும். இப்படத்தில் தம்பி ராமையா, ரேயா மற்றும் நிலா என்ற 10 வயது குழந்தை நட்சத்திரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எம் ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். தொலைக்காட்சி புகழ் அஷ்வின் குமார் மாஸ் தோற்றத்தில் காணப்படுகிறார். மலைவாசியாக கோவை சரளா நடித்துள்ள இந்த படத்தில் மைனா சாயல் கொஞ்சம் உள்ளது.. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!