
விக்ரம் வேதா படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான புஷ்கர் - காயத்ரி தம்பதி, தற்போது அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சைப் அலி கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிக்கின்றனர். இதனிடையே அவர்கள் இருவரும் தற்போது ஒரு வெப் தொடருக்காக கதை, திரைக்கதை எழுதி உள்ளனர்.
சுழல் என பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த வெப் தொடரை பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர்.
இந்த வெப் தொடர் வருகிற ஜூன் 17-ந் தேதி அமேசான பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, ஜாப்பானிய மொழி, அரபிக் உள்பட 30 மொழிகளில் இந்த வெப் தொடர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடர் மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்டதாகும். காணாமல் போன ஒரு பெண் குழந்தையை பற்றிய தேடலின் போது நடக்கும் பல திடுக்கிடும் உண்மைகள் அடங்கிய தொடராக இது இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Mysskin : சிவகார்த்திகேயனுடன் திடீரென கூட்டணி அமைத்த மிஷ்கின்... சர்ப்ரைஸ் கூட்டணியால் ஷாக் ஆன கோலிவுட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.