
கமல்ஹாசன், பகத் பாசில் நரேன், காளிதாஸ் ஜெயராம், சூர்யா, விஜய் சேதுபதி, காயத்ரி, சிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் விக்ரம். மாஸ்டர், கைதி, மாநகரம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் இப்படத்தையும் இயக்கி இருந்தார்.
இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு கிரீஷ் கங்காதரன், ஸ்டண்ட்டுக்கு அன்பறிவு என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் பணியாற்றியுள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழில் உருவாகி இருந்த இப்படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நேற்று பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது.
விறுவிறுப்பான திரைக்கதை, கச்சிதமான கதாபாத்திர தேர்வு, கைதி படத்தோடு ஒன்றிப்போகும் வகையில் கதையை சரியாக வடிவமைத்தது என பல்வேறு பாசிடிவ் விஷயங்கள் படத்தில் உள்ளதால் மக்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்றால் அது சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் தான். படம் முடியும் போது 5 நிமிடம் மட்டுமே வரும் இந்த கதாபாத்திரம் செம்ம மாஸாக இருந்ததால் மக்கள் மனதில் ஈஸியாக பதிந்துவிட்டது.
இந்நிலையில், ரோலெக்ஸ் கதாபாத்திரம் குறித்து சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் நடித்தது கனவு நனவானது போல் இருந்தது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸுக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Vikram : அண்ணாத்த வசூல் சாதனையை முதல் நாளிலேயே அடிச்சு தூக்கிய விக்ரம்... பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கமல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.