உருவத்திற்கும் நடிப்பிற்கும் எந்த சமந்தமும் இல்லை: அப்போ நாகேஷ், இப்போ யோகி பாபு!

By Rsiva kumar  |  First Published Dec 26, 2022, 2:14 PM IST

நகைச்சுவை நடிகர் நாகேஷ் காமெடி ரோலில் மட்டுமின்றி ஹீரோவாகாவும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.


தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன் என்ற நாகேஷ். தாராபுரம் கொழிஞ்சிவாடி என்ற பகுதியில் உள்ள கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள். சிறு வயது முதலே நண்பர்களாலும், குடும்பத்தாராலும் குண்டப்பா என்றும் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டு வந்தார்.

அம்மை நோய் தாக்கம்:

Tap to resize

Latest Videos

தாராபுரத்தில் 10 ஆம் வகுப்பு வரை படித்து வந்த நாகேஷ், கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது நாகேஷிற்கு அம்மை நோய் வந்ததால், அவரது முகம் முழுவதும் தழும்புகள் உண்டானது. கல்லூரி படிப்பை முடித்த நாகேஷ் தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் ரயில் நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவே, சினிமாவில் அறிமுகமாகும் வரையில் எழுத்தாளராகவே பணியாற்றினார்.

டாப் லெவலில் வாரிசு படத்தின் ஜிமிக்கு பொண்ணு சாங்!

சிறு வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நாடகத்தில் தை தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் தை தை என்று நோயாளியாக மேடையில் வலம் வந்தார். இதன் காரணமாக அவர் தை நாகேஷ் என்றும் ஆங்கிலத்தில் Thai தை என்பதை தாய் என்று மாற்றி படித்ததால் தாய் நாகேஷ் என்றும் அழைக்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பிறந்த நாகேஷ் 1959 ஆம் ஆண்டுகளில் சினிமாவில் அறிமுகமானார்.

தாமரைக்குளம் தான் நாகேஷின் முதல் திரைப்படம். ஸ்ரீ தரின் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் முக்கியமான நகைச்சுவை ரோலில் நடித்தார். இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வந்த சர்வர் சுந்தரம் படத்தில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி தான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதை நிரூபித்தார். பெரும்பாலும், எம்ஜிஆர், சிவாஜி கணேசன் நடித்த படங்களில் நடித்திருந்தார்.

தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். உருவ தோற்றத்தால் கேலி, கிண்டலுக்கு உள்ளான நகைச்சுவை நடிகர் நாகேஷ், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் நடிப்பதற்கு உருவம் தேவையில்லை, திறமை இருந்தாலும் போதும் என்பதை தனது நடிப்புத் திறமையின் மூலம் வெளிப்படுத்தி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தேன் கிண்ணம், எதிர் நீச்சல், யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி, நவக்கிரகம் போன்ற படங்களில் ஹீரோவாகவே நடித்துள்ளார். சச்சு மற்றும் மனோரமா ஆகியோருடன் நாகேஷ் நடிக்கும் காட்சி பார்வையாளர்களையும், ரசிகர்களையும் மெய் சிலிர்க்க வைக்கும். அன்றைய காலகட்டங்களில் நாகேஷ் என்றாலே, இன்றைய காலகட்டத்திற்கு யோகி பாபு ஒரு சிறந்த உதாரணம். கிரிக்கெட் மீது அதிக ஆசை கொண்ட யோகி பாபு சினிமாவில் உச்சம் தொட்டு வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ஹீரோவாகவும் வலம் வருகிறார்.

காதலரின் பிறந்தநாளில்... வித்தியாசமாக காதலை அறிவித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்..! விரைவில் திருமணமா?

click me!