Nagasaithanya interview :"விவாகரத்து மகிழ்ச்சி தான்" பிரிவு குறித்து மனம் திறந்த சமந்தாவின் கணவர் நாகசைதன்யா

Published : Jan 13, 2022, 06:26 PM IST
Nagasaithanya  interview  :"விவாகரத்து மகிழ்ச்சி தான்" பிரிவு குறித்து மனம் திறந்த சமந்தாவின் கணவர் நாகசைதன்யா

சுருக்கம்

Nagasaithanya  interview  : சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும்" என்று நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். 

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அவருக்கு போட்டியாக அவரின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவும் தற்போது ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். பங்காராஜு என்கிற படத்தில் இடம்பெறும் வாசிவாடி என்கிற பாடலில் நடிகை பரியா அப்துல்லா உடன் இணைந்து நாகசைதன்யா குத்தாட்டம் போட்டுள்ளார். 

இந்நிலையில் முதல் முறையாக திருமண பந்த முறிவை பற்றி பேசியுள்ள நாகா சைதன்யா :  பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

August Release Movies : டிசி முதல் டாக்ஸிக் வரை... ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப்போகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Breaking News: எஸ்.ஜானகியை தொடர்ந்து காலமான பிரபல பின்னணி பாடகி.! இசையுலகில் அடுத்த பேரிழப்பு.!