Priyanka missing : பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா மிஸ்சிங்... கொரோனா பாதிப்பா? - குழப்பத்தில் ரசிகர்கள்

Kanmani P   | Asianet News
Published : Jan 13, 2022, 03:43 PM ISTUpdated : Jan 13, 2022, 03:46 PM IST
Priyanka missing  : பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா மிஸ்சிங்... கொரோனா பாதிப்பா? - குழப்பத்தில் ரசிகர்கள்

சுருக்கம்

bigg boss 5 priyanka missing : முதல் ப்ரோமோவில் இருந்த பிரியங்கா மற்ற இரண்டு ப்ரோமோக்களில் காணப்படவில்லை.. இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 5 முடிவடியவிருக்கும் நிலையில் வெற்றியாளராவார் என கருத்தப்பட்ட பிரியங்கா திடீரென காணாமல் போனது பல யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மீதமுள்ள ராஜு, பிரியங்கா,  சிபி, நிரூப், பாவனி ஆகிய ஆறு பேரில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த  வாரம் குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறியது தாமரை என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுமே இல்லாமல் வெளியேறியதற்கு பதில் முன்பே பிக் பாஸ் கொடுத்த ஆஃபரை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதில் ராஜு அல்லது பிரியங்கா இருவரில் ஒருவர் கட்டாயம் பிக்பாஸ் வெற்றியாளராவார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிற்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் ப்ரோமோவில்  தாமரை என்ட்ரி கொடுக்கிறார். பாடலுடன் உள்ளே நுழையும் தாமரையை அனைவரும் அன்பாக வரவேற்கின்றனர்.

 

பின்னர் ஈரமான ரோஜாவே 2 நடிகர்கள் மற்றும் செந்தூரப்பூவே நடிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். அவர்கள் கண்ணாடி கூண்டில் இருந்தபடி போட்டியாளர்களை சந்திக்கின்றனர். பின்னர் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக ராஜு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த மூன்று ப்ரோமோக்களில் முதல் ப்ரோமோவில் இருந்த பிரியங்கா மற்ற இரண்டு ப்ரோமோக்களில் காணப்படவில்லை.. இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 5 முடிவடியவிருக்கும் நிலையில் வெற்றியாளராவார் என கருத்தப்பட்ட பிரியங்கா திடீரென காணாமல் போனது பல யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!