Thalapathy 67 : வாவ்..மாஸ்டர் வெற்றியில் ட்ரெண்டாகும் தளபதி 67..ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Kanmani P   | Asianet News
Published : Jan 13, 2022, 02:31 PM IST
Thalapathy 67 : வாவ்..மாஸ்டர் வெற்றியில் ட்ரெண்டாகும் தளபதி 67..ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

சுருக்கம்

Thalapathy 67 : மாஸ்டர் படம் வெளியாகி ஒரு வருடம் கடந்துள்ளதை கொண்டாடும் விதமாக படக்குழு மாஸ்டர் அன்சீன் காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் தளபதி 67 என்கிற ஹேஸ்டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் (vijay). இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் நடிக்க அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ஒரு வருடம் கடந்துள்ளதை கொண்டாடும் விதமாக படக்குழு மாஸ்டர் அன்சீன் காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் தளபதி 67 என்கிற ஹேஸ்டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67க்காக காத்திருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?