விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

Published : Jul 07, 2022, 08:48 PM ISTUpdated : Jul 07, 2022, 08:57 PM IST
விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை  வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

சுருக்கம்

கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்ட கமலின் விக்ரம் படத்தின் ஒரிஜினல் பிஜிஎம் -யை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் நான்கு ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு வெளியாகியுள்ள விக்ரம் ரசிகர்களுக்கு சரியான தீனிபோட்டுள்ளது. முன்னதாக விஸ்வரூபம் 2 வெளியாகியிருந்தது. இதையடுத்து பிக்பாஸ், அரசியல் களம் என பரபரப்பாக இருந்த கமல் விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் ஒரு திட்டத்தை ஒப்பந்தம் செய்தார். முன்னதாக இயக்குனர் லோகேஷ் கார்த்தியின் ஹிட்டான கைதியை இயக்கி இருந்தார்.

பல கட்ட தாமதங்களுக்கு பிறகு ஒருவழியாக படத்தை முடித்து கொடுக்க எண்ணிய கமல் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாயகன் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார். முன்னதாக விக்ரம் என்கிற டைட்டில் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் இறுதிநேர படப்பிடிப்பு விரைவாக நடத்தப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...விஜய் மனைவியின் சகோதரி யார் தெரியுமா?..வைரலாகும் போட்டோஸ்..

விஜய் சேதுபதி, பகத் பாசில் வில்லன்களாக நடிக்கின்றனர் என முன்பே தெரியவந்த நிலையில் இறுதி இவிஸ்ட்டாக சூர்யாவின் சிறப்பு தோற்ற அறிவிப்பு வெளியானது. பின்னர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட் ,மூவிஸ் தென்னக ரயில்வேயில் விக்ரம் பட போஸ்டரை வரைந்து ப்ரோமோஷனை துவங்கியது. 

மேலும் செய்திகளுக்கு...மகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பிரபல சீரியல் நடிகை!

பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாகவே கமல் எழுதி, படியிருந்த பத்தல பத்தல படம் குறித்த எதிர்ப்பார்ப்பை பற்ற வைத்திருந்தது.

கடந்த மாதம் உலகம் முழுதும் வெளியான விக்ரம் கிளைமேக்சில் கைதி 2 மற்றும் விக்ரம் 2 வுக்கான துணுக்குகள் கொடுக்கப்பட்டு விட்டன. வெளியான முதல் வாரத்திலேயே 300 கோடியை தட்டி உலகரங்கில் வியப்பை ஏற்படுத்திய இந்த படம் கமலின் சிறந்த படமாக மாறியது. இதையடுத்து இயக்குனருக்கு சொகுசு கார், துணை இயக்குனர்களுக்கு பைக் மற்றும் 10 நிமிட தரமான சம்பவமாக அமைந்த ரோலெக்ஸ் (சூர்யா) வுக்கு கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்தார் கமல். 

மேலும் செய்திகளுக்கு..மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

இந்த படம் கிட்டத்த 420 கோடிகளை வசூலாக பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரிஜினல் பிஜிஎம் -யை இதன் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!