மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

Published : Jul 07, 2022, 08:05 PM ISTUpdated : Jul 07, 2022, 08:09 PM IST
மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

சுருக்கம்

 சாய் பல்லவி முக்கிய ரோலில் நடித்துள்ள கார்கி பட ட்ரைலரை அதன் தயாரிப்பாளர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார். மற்ற முன்னணி நாயகிகள் போலவே இவரும் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனி அடையாளத்தை பெற்று வருகிறார். நடிகை என்றாலே கிளாமர் தான் என்னும் கருத்தை உடைத்த சாய்பல்லவி, நடிப்புக்குத் தேவையான வேடங்களில் நடித்து குடும்பப் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். தமிழில் இவர் நடித்த மாரி 2 மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்று விட்ட இவர் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பாராட்டுகளை பெற்றார்.  சமீபத்தில், 'விராடபர்வம்'  படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சாய் பல்லவி இதில் புரட்சியாளரின் மனைவியாக நடித்திருந்தார்.

இதற்கிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் காஷ்மீர் பைல்ஸ் குறித்து இவரின் கருத்து பேசும் பொருளானது. பேட்டியின் போது அந்த படத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சமீபத்தில் மாடுகள் கொண்டு சென்ற முஸ்லீம் லாரி ட்ரைவரை தாக்கியதும் சாதி ரீதியான தாக்கம் தானே. இதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என கூறினார். 

இதுகுறித்த பலத்த விமர்சனம் வந்து கொண்டிருந்த வேளையில் கார்கி பட ட்ரைலர் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி , காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்  இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்க சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் ஜூலை 15 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டீச்சராக இருக்கும் டீச்சராக இ]பணிபுரியும் நாயகியின் தந்தை வாட்ச்மேனாக உள்ளார். இவரை போலீசார் காரணம் ஏதும் சொல்லாமல் கைது செய்து கொண்டு செல்கின்றனர். இதனால் சாய்பல்லவியை சமூகமும் ஊடகங்களும் மிகவும் மோசமாக நடத்துகிறது. இருந்தும் தளராத கார்கி தந்தைக்காக போராடும் காட்சிகள் உள்ளன.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!