
வெள்ளாவி வச்சு தான் வெளுத்தங்களா? என உண்மையில் கேட்கவேண்டியது தமன்னாவிடம் தான். மெழுகு சிலை போன்ற அழகை உடைய தமன்னா தற்போது தெலுங்கு, இந்தி என பிஸியாக உள்ளார். தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடத்த இவருக்கு சமீபகாலாமாக இங்கு வாய்ப்பு குரைவாகவே உள்ளது. இந்நிலையில் தமன்னா சமீபத்தில் ஈஷா யோகா மையத்தில் பெற்ற அனுபவம் குறித்து பேசியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் " ஈஷா யோகா மையத்தில் நான் இருந்த மிக அழகான மூன்று நாட்களை இன்னும் கடந்து வருகிறேன். சாம்பவி கிரியாவைக் கற்றுக்கொள்ள விரும்புவதிலிருந்து நம் உலகம் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும் என்பதை அனுபவிப்பது வரை. இன்னர் இன்ஜினியரிங் திட்டத்தில் ஒவ்வொரு கணமும் தீவிரமாக புத்துயிர் பெற்றேன்.. எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் மற்றும் எனது ஆன்மீகப் பயணத்தை தொடங்கக்கூடிய ஒரு கிரியாவில் தொடங்கப்பட்டதை நான் பாக்கியமாக உணர்கிறேன்." என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...https://tamil.asianetnews.com/gallery/cinema/cinema-actress-silk-smitha-suicide-note-rene9d
சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, அஜித்துடன் வீரம், விஜய் சேதுபதியுடன் தர்ம துரை, பிரபுதேவாவுடன் தேவி என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியான தமன்னா பாகுபலி 2வில் மாஸ் காட்டி இருந்தார். அதன் பின்னர் தனது பாதையை மாற்றி கொண்ட இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!
இறுதியாக தமன்னா ஹாரர் மூவியான பெட்ரோமாக்ஸ், விஷாலின் ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் தொன்டரி இருந்தார். தற்போது தெலுங்கு , இந்தியில் பிஸியாக இருக்கும் இவர் தெலுங்கில் இரு படங்களிலும், பாலிவுட்டில் மூன்று படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இது அமேசான் பிரைமுடையதாகவும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.