விதியை மீறி தீனா போட்ட திட்டம்.. மிரள விட்ட இளையராஜா! புதிய தலைவரானார் சபேசன்..!

By manimegalai aFirst Published Feb 19, 2024, 4:27 PM IST
Highlights

இசை கலைஞர்கள் தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், இதில் தீனா மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், சபேசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இசையமைப்பாளர் சபேசன் தொடர்ந்த வழக்கால் அதிரடியாக தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்த சென்னை உயிர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

மேலும் தற்காலிக உறுப்பினர்களுக்கும், இணை உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, தீர்மானத்திற்கு சங்கங்களின் பதிவாளரிடம்  ஒப்புதல் பெரும் வரை, தேர்தல் நடத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிமன்றம், இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தது. எனவே கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்தல், கடந்த ஐந்து மாதங்களாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில்... நேற்று நடந்தது.

அப்படி போடு.! தளபதி விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி!

இதில், இசை கலைஞர்கள் சங்கங்களில் உள்ள விதிகளை மீறும் விதமாக, ஏற்கனவே இரண்டு முறை தலைவராக பதவி வகித்த தீனா, மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இது இசைக் கலைஞர்கள் சங்கத்தில் உள்ளவர்களை ஆத்திரமடைய செய்தது. குறிப்பாக இளையராஜா, தீனாவை எச்சரிக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மிரட்டும் தொனியில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அனிகாவுக்கு போட்டியா? ஹீரோயினை மிஞ்சிய அழகு! 'கோட்' படத்தில் விஜய் மகளாக நடிக்கும் பிரபலத்தின் 16 வயது மகள்!

இதை தொடர்ந்து, நேற்று நடந்து முடிந்த தேர்தலில்... இசையமைப்பாளரும், தேனிசை தென்றல் தேவாவின் தம்பியான சபேசன் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார். மேலும் செயலாளராக முரளி, பொருளாளராக சந்திர சேகர், துணை தலைவராக மூர்த்தி, இணை செயலாளராக பத்மஸ்ரீ பாலேஷ், ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலை பாலசுப்ரமணியன் தேர்தல் அதிகாரியாக இருந்தார். 

சபேசனை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டி போட்ட, 248 வாக்குகளே பெற்றிருந்தார். ஆனால் சபேசன் 318 வாக்குகள் பெற்று, 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தீனா விதிகளை மீறி செயல்பட்டதும், அவருக்கு எதிராக இளையராஜா பொங்கி எழுந்ததும் தான், தீனாவின் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

 

click me!