
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக பெரிதாக எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் சென்றுக்கொண்டிருந்த நிலையில். நேற்று நித்யா - பாலாஜியின் வெங்காய பிரச்சனை வெடித்தது.
இதைத்தொடர்ந்து தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது மும்தாஜ் மற்றும் சென்ராயன் பிரச்சனை.
தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் "நடிகை மும்தாஜ் என்றாலே பலருக்கும் முதலில் நினைவில் வரும் பாடலான "கட்டி பிடி கட்டி பிடி டா" என்ற பாடலை யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் பாடலை பாட, மும்தாஜுடன் நடனமாடுகிறார் நடிகர் சென்ராயன்.
பின், 'நான் மும்தாஜுடன் சேர்ந்து நடனம் ஆடிவிட்டதாக, சென்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது'.
இதைதொடர்ந்து, நடிகை மும்தாஜ் 'இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அழுகிறார். பின் அங்கு அனைத்து போட்டியாளர்களும் கூடுகிறார்கள். ஷாரிக் மும்தாஜை கட்டி அனைத்து சமாதானம் செய்கிறார். பின் ஷாரிக் சென்ராயனை பார்த்து, 'ஏன்டா இப்படி பண்ற வெளியே போடா என்று கூறி அங்கிருந்து அனுப்புகிறார்'.
பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த வெங்காய பிரச்சனை போல் இல்லாமல், இதில் மும்தாஜை அழுது கதறுவதால் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.