
நாளைய தினம் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் ஸ்பெஷலான நாள். ஜீன் 22 தளபதி விஜய்-ன் பிறந்தநாள். தங்கள் தளபதியின் பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட, விஜய் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நாளை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.
விஜயின் பிறந்த நாளுக்கான காமென் டிபி கூட டிசைன் செய்து, அனைத்து விஜய் ரசிகர்களும் தங்கள் டிபி-ல் வைத்திருக்கின்றனர். விஜயின் பிறந்தநாள் சிறப்பாக எச்.டி.கட்ஸ் ஒரு மேஷ் அப் வீடியோவை தயார் செய்து வெளியிட்டிருக்கிறது. இதனை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில் தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த, மெர்சல், தலைவா, கத்தி போன்ற பல திரைப்படங்களில் வரும் கலக்கலான விஜய் எண்ட்ரி சீன்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அந்த வீடியோவுடன் பின் வரும் மெசேஜையும் பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். ”ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், தளபதி62-ஐ காண அகில உலகமும் காத்திருக்கிறது” என பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த வீடியோ இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.