
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தான் முதல் முதலாக பிரச்சனை ஒன்று வெடித்திருக்கிறது. மும்தாஜ் மற்றும் நித்யா இடையே துவங்கிய இந்த பனிப்போர். இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை, முதலாவதாக இன்று வெளியான பிக் பாஸ் பிரமோ வெளிக்காட்டி இருந்தது.
தற்போது பிக் பாஸின் இரண்டாவது பிரமோ வெளியாகி இருக்கிறது. இந்த பிரமோவின் போது மும்தாஜ் செண்ட்ராயனுடன், கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடலுக்கு நடனமாடும் காட்சி, முதலில் வருகிறது. தொடர்ந்து செண்ட்ராயன் ”நான் மும்தாஜ் கூட டான்ஸ் ஆடிட்டேன் என மகிழ்ச்சியில் துள்ளிகிறார்”.
ஆனால் அதனை தொடர்ந்து வந்த காட்சிகளில் மும்தாஜ் கதறி அழுகிறார். அவரை அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர். தொடர்ந்து ஒரு குரல் இவன் தான் மும்தாஜை அழ வைக்கிறான் என குற்றம் சாட்டுகிறது. அதற்கு சென்றாயனின் முகத்தை பிரமோவில் காட்டுகின்றனர். தொடர்ந்து வெளிய போடா நீ என்றும் ஒரு குரல் கேட்கிறது.
இந்த பிரமோவில் இதற்கெல்லாம் காரணம் செண்ட்ராயன் என்பது போல காட்டி இருக்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் பிரமோ எப்போதும் எதிர்பார்ப்பை கூட்ட இப்படி தான் வடிவமைக்கப்படும். நிகழ்ச்சியை பார்த்தால் உள்ளே நடந்தது பிரச்சனையாகவே இருக்காது. ஒரு வேளை மும்தாஜ் அவரின் குடும்ப நபர்களை நினைத்து கூட அழுதிருக்கலாம். என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.