தலை சுற்ற வைக்கும் பிக் பாஸ் லாபம்...!

First Published Jun 21, 2018, 12:16 PM IST
Highlights
spread the Big Boss Profits


கடந்த ஆண்டு தமிழில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட சின்னத்திரை நிகழ்ச்சி என, பெருமையை பெற்றது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மீது, பலருக்கும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் தொகுப்பாளர் கமல்ஹாசனின் கிடுக்குப்பிடி கேள்விகளும், நடிகை ஓவியாவின் உண்மையான குணமும் தான், ஓவியாவிற்கு  எதிராக செயல்பட்ட சிலரை இவர் எப்படி சமாளித்து வந்தார்... என்பதை பார்ப்பதற்காகவும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இந்த நிகழ்சிக்கு உருவானது.

இந்நிலையில் தற்போது தமிழில் துவங்கப்பட்டுள்ள பிக்பாஸ் சீசன் 2, நிகழ்ச்சிக்கும், இதே போன்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சியாளர்கள், கோடிக்கணக்கில் செலவு செய்து, பிரத்தேயகமான வீட்டை உருவாக்கி உள்ளனர். மேலும் வீட்டை சுற்றியும் எந்த நேரமும் போட்டியாளர்கள் செய்யும் செயல்களை கவனிக்க விலை உயர்ந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதே போல், ப்ரோடக்ஷன் செலவு, தொகுப்பாளர் சம்பளம், இதில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகை என பல கோடிகளை விதையாய் விதைத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. 

இவ்வளவு, செலவு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் வரவை (லாபம்) கேட்டல் உங்களுக்கே தலைசுற்றி போய்விடும். ஆம் இந்த நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு மட்டும், 30 வினாடிக்கு மட்டும் ரூ.20 லட்சம் மேல் வசூலிப்பதாக கூறப்படுகிறது. 

இப்படி ஒரு நாளைக்கு மட்டும் விளம்பரங்களுக்கு கிட்ட தட்ட ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் வருகிறதாம், இதுவே 100 நாள் என்றால், நீங்களே நினைத்து பாருங்கள்? மேலும் ஹாட் ஸ்டார் ஆப் மூலம் வரும் வருமானம் என நிர்வாகத்திற்கு இந்த நிகழ்ச்சி மூலம் கொள்ளை லாபம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி வெளியாகி வரும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை அவர்கள் தான் கூறவேண்டும். 

click me!