
நடிகரும், மக்கள் நீதி மையத்தில் தலைவருமான கமல்ஹாசன், இன்று தன்னுடைய கட்சிக்கான அங்கீகாரம் தொடர்பாக தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இவர் நடிகை கௌதமி பற்றி கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்தது மட்டும் இன்றி, கெளதமியை பார்த்து நறுக் என கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.
கமல் - கௌதமி:
நடிகர் கமல் மற்றும் கௌதமி இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக, சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்களுக்குள், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கௌதமி, கமலை விட்டு பிரிய முடிவு செய்தார். இதனை அனைவருக்கும் தெரியும்படி, தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலமும் உறுதி படுத்தினார்.
கௌதமி பதில்:
கமல்ஹாசனை விட்டு பிரிய காரணம் என்ன? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த கௌதமி, தன்னுடைய மகளின் வருங்காலத்தை எண்ணி, மிகவும் கனத்த மனதுடன் இந்த முடிவை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் கமலுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள போவதில்லை என்றும் கூறினார்.
சம்பள பிரச்சனை:
இந்த பிரிவை தொடர்ந்து, ஒரு முறை செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கௌதமி, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது, தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை பல முறை தான் நினைவு படுத்தியும் அவர் கொடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.
கமல் பதிலடி:
இந்நிலையி இன்று தில்லி சென்ற கமலிடம், செய்தியாளர் ஒருவர் நடிகை கௌதமி, ராஜ்கமல் பிலிம்ஸில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது தனக்கு சேர வேண்டிய சம்பளம் கொடுக்கவில்லை என கூறியிருந்தாரே..? என கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கமல், கௌதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட்டோம். சம்பளம் வழங்க வில்லை என அனைவர் மத்தியிலும் கூறிய அவர், சம்பளம் கொடுக்கப்பட்டதை ஏன் கூறவில்லை என கௌதமியிடம் கேள்வி எழுப்பியது, அவரை அசிங்கப்படுத்துவது போல் இருந்தது.
இதற்கு கௌதமி பதில் கொடுப்பாரா...? இல்லையா...? என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.