ஸ்டைலிஷ் அண்ணாச்சி..ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியானது தி லெஜண்ட் பர்ஸ்ட் சிங்கிள்

Kanmani P   | Asianet News
Published : Apr 09, 2022, 07:09 PM IST
ஸ்டைலிஷ் அண்ணாச்சி..ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியானது தி லெஜண்ட் பர்ஸ்ட் சிங்கிள்

சுருக்கம்

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் தி லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் 'Mosalo Mosalu' தற்போது வெளியாகியுள்ளது.

 சரவண ஸ்டோர் அண்ணாச்சி :

தமிழகத்தில் மிகவும் பிரபலமான மல்டி ஸ்டோர்  சரவணா ஸ்டோர். இதன் ஒரு கிளையான செல்வரத்தினம் கடையின் முதலாளி லெஜண்ட் சரவணன் அருண். இவர் தனது கடையின் விளம்பரத்தில் தானே நாயகனாக களமிறங்கினார். அதற்கென ஹன்சிகா, தமன்னா என டாப் ஹீரோயின்ஸ் உடன் நடித்து விமர்சங்களை வாங்கி கட்டிக்கொண்டார்.  

அண்ணாச்சியின் முதல் படம்  :

மன உறுதியை விடாத அருண் வெள்ளித்திரையில் நாயகனாகும் முன்னெடுப்பை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சங்கத்திற்கு டொனேஷனை அள்ளி கொடுத்திருந்தார் சரவணன் அண்ணாட்சி. இதையடுத்து  சொந்த செலவில் தி லெஜண்ட் என்னும் படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார்.  ஜேடி மற்றும் ஜெர்ரி  என இருவர் இயக்கும் இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு... Kuttrame Kuttram :பீஸ்ட், கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் எதிரொலி... நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் நடிகர் ஜெய் படம்

பாலிவுட் நாயகிகள் :

இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, ரோபோ சங்கர், விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே  உள்ளது. விளம்பரத்தில் நம்மூர் நாயகிகள் நடித்ததன் காரணமாக அவர்களது மார்க்கெட் குறைந்து விட்டதாமுதலில் தி லெஜண்ட் படத்தில் நடிக்க நம்ம ஊர் முன்னணி நடிகைகளிடம் தான் பேசினார்களாம் ஆனால் இவரின் விளம்பரத்தில் நடித்த பிறகு தான் ஹன்ஷிகா, தமன்னாவுக்கு மார்க்கெட் குறைந்து விட்டது என கூறி உள்ளூர் நாயகிகள் மறுக்கவே வெளியூர் நாயகிகள் களமிறக்கப்பட்டுள்ளனராம்.

பர்ஸ்ட் சிங்கிள் :

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானதை அடுத்து முதல் சிங்கிள் ரிலீஸ் டேட்  அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று Mosalo Mosalu லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் லெஜண்ட் சரவணன் புல் மேக்கப்பில் ஸ்டைலிஷ் குத்து போட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு திட்டிட்டாங்க! சிங்கம்புலி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்!
2026க்கு முன்னதாக புகழ் வீட்டில் நடந்த சோகம்: சொல்லாமலே தனியாக விட்டுச் சென்ற அப்பா! புகழின் தந்தை காலமானார்!