
விஜய்யின் ‘பகவதி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த ‘சென்னை 600028’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சசிகுமார் இயக்கத்தில் 'சுப்ரமணியபுரம்', ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’, அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனதால் நடிகர் ஜெய் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
தற்போது இவர் கைவசம் அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குற்றமே தண்டனை. வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டியநாடு, நான் மகான் அல்ல என பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் நடிகர் ஜெய் உடன் அவர் கூட்டணி அமைக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் அவர்கள் இருவரும் இணைந்து வீரபாண்டியபுரம் என்கிற படத்தில் பணியாற்றினர். இப்படம் கடந்த மாதம் வெளியானது.
இந்நிலையில், குற்றமே குற்றம் படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் திரையரங்குக்கு பதிலாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். கொலை குற்றத்தை மையப்படுத்தி கிராமத்து பாணியில் திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக புதுமுக நடிகை திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.
மேலும் பாரதிராஜா, ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வேல்ராஜ் ஒளிப்பதிவில், அஜீஸ் இசையில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... தனுஷ் பட ஹீரோயின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை.... ரூ1.41 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போனதால் பரபரப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.