
முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா தான் நடிக்க தேர்வானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன் பிறகு பட குழுவுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் விக்ரம் தேர்வாணர்.
அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் முழுவீச்சில் துவங்கியது, 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ஏறத்தாழ 70 சதவிகிதம் முடிக்கப்பட்ட நிலையில், அப்பொழுது இந்த திரைப்படத்தை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனத்துடன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டு இந்த திரைப்படம் அப்படியே நின்று போனது. பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களே இந்த படத்தை தயாரித்து உருவாக்க துவங்கினர்.
பல்வேறு தடைகளை தாண்டி இப்பொது இந்த படம் வெளியாக காத்திருக்கிறது, அண்மையில் தணிக்கை செய்யப்பட்டு இந்த படத்தின் நீளம் 2 மணிநேரம் 25 நிமிடம் மற்றும் 12 நொடிகள் என்று அறிவிக்கப்பட்டது. அதே போலெ இந்த படத்தின் தணிக்கை சான்றிதழும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த சான்றிதல் இப்பொது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
கெட்டவார்த்தை மட்டும் சரியாக 18 இடங்களில் வெட்டப்பட்டுள்ளது, அது மட்டுமில்லாமல் இன்னும் சில வார்த்தைகள் மற்றும் கட்சிகளுக்கு தணிக்கை குழு கத்திரி போட்டுள்ளது. நவம்பர் மாதம் 24ம் தேதி உலக அளவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.