பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கமல்ஹாசன் தோன்றும் இரண்டு புதிய ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, பிக்பாஸ் சீசன் 7 பணிகள் துவங்கிவிட்ட போதிலும்... கமல்ஹாசன் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்ததால்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக, பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி, துவங்க உள்ள நிலையில், அவ்வப்போது இதில் கலந்து கொள்ள உள்ள, போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகிவருகிறது.
அந்த வகையில், பல பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டு வந்தாலும், யார் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என்பது, நாளைய தினமே தெரியவரும். பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவதால், இனி பிக்பாஸ் குறித்த பஞ்சாயத்துக்கள் தான் அதிகம் சமூக வலைத்தளத்தில் பேசப்படும். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் தீனி போடுவது போல் இந்த நிகழ்ச்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
நாயகன் மீண்டும் வர..😍 எட்டுத்திக்கும் பயம்தானே..🔥 of Bigg Boss Tamil Season 7 - நாளை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @disneyplushotstartamil pic.twitter.com/RqXRA4nNlf
— Vijay Television (@vijaytelevision)
இந்நிலையில் விஜய் டிவி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இரண்டு பிக்பாஸ் ப்ரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு புரோமோவில் நாளைய தினம் பிக்பாஸ் லான்ச் நடைபெறுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மிகவும் ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து, வருகையில்... நாயகன் மீண்டும் வர.. எட்டுத்திக்கும் பயம்தானே என்ற பாடல் ஒலிக்கிறது. மற்றொரு ப்ரோமோவில், நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது, போட்டியாளர்கள் யார் என கணித்து விட்டீர்களா? என கல்ஹாசன் கேட்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.
for the of Bigg Boss Tamil Season 7 - வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @disneyplushotstartamil pic.twitter.com/ha90E57Fir
— Vijay Television (@vijaytelevision)