Mohan Hara movie update: புது அவதாரம் எடுத்து திரும்பி வந்த மைக் மோகன்...ஆக்க்ஷன் படமாக ஹாராவில் மிரட்டல்..!

By Anu Kan  |  First Published Mar 21, 2022, 11:53 AM IST

Mohan Hara movie update: புது அவதாரம் எடுத்த மைக் மோகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்து ஹாரா படத்தில் ஆக்க்ஷனை கையில் எடுத்துள்ளார். 


தனது, வழக்கமான பாணியை கைவிட்டு புது அவதாரம் எடுத்த மைக் மோகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்து ஹாரா படத்தில் மிரட்டலை கையில் எடுத்துள்ளார். 

தமிழ்த் திரையுலகில், தனக்கென தனி பாணியை கடைபிடித்து முத்திரை பதித்தவர் மோகன். 80 களில் கனவு நாயகனாக வலம் வந்த இவர் மைக் மோகன் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.  குறிப்பாக,80 களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத் தாண்டி தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நாயகன். மோகனின் படங்கள் வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. ஏனெனில், நடித்த படங்களில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் தான். 

Tap to resize

Latest Videos

மோகன் ஆரம்ப கால பயணம்:

இவரை, கமல்ஹாசன் நடிப்பில், 1977ஆம் ஆண்டு வெளியான 'கோகிலா' என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு, அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. 

பிறகு, தமிழ் திரையுலகில்  மகேந்திரன் இயக்கத்தில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கிளிஞ்சல்கள்' பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், கோபுரங்கள் சாய்வதில்லை, விதி ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்து தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

 இவரது படங்களில் பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. வெளியூர் பேருந்து, கார்பயணங்களில் செல்லும் போது, பெரும்பாலும் கேட்கப்படும் பாடல்கள் இவரது திரைப்பட பாடல்கள். இவர் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்திருந்தாலும், இவர் பெரியளவில் ஆக்ஷன் படங்களில் நடித்தது இல்லை. 

 ‘ஹாரா’ திரைப்படம்: 

இந்நிலையில், சில காரணங்களால் நடிக்காமல் இருந்த மோகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ‘ஹாரா’ என்ற படத்தில் நடிக்கிறார். விஜயஸ்ரீ  இயக்கத்தில், தான் நடித்து வரும்  ‘ஹாரா’ வில் தனது, வழக்கமான பாணியை கைவிட்டு புது  அவதாரமாக ஆக்ஷனை கையில் எடுத்துள்ளார் மோகன்.

ஆக்ஷனை கையில் எடுத்த மோகன்:

இதுவரை நாம் சாக்லேட் பாய் கதாநாயகனாக மட்டுமே பார்த்து வந்த மோகன், இந்த புதிய படத்தின் போஸ்டரில் டெரர் லுக்கில் தாடியுடன் கலக்கலாக இருக்கிறார். இவர் நடித்த முக்கால் வாசிப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார் இந்த படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. இதன் முழு தகவலையும் பொருந்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க...Nadigar Sangam: முதல்வரை சந்திப்போம்...! இது மாபெரும் சாதனை...நடிகர் சங்க தேர்தல் வெற்றி களிப்பில் கார்த்தி..!

click me!