Etharkkum Thunindhavan: சூர்யாவுக்கு கை கொடுக்காத எதற்கும் துணிந்தவன்..? வசூல் குறைய இது தான் காரணமா.?

Anija Kannan   | Asianet News
Published : Mar 21, 2022, 09:34 AM IST
Etharkkum Thunindhavan: சூர்யாவுக்கு கை கொடுக்காத எதற்கும் துணிந்தவன்..? வசூல் குறைய இது தான் காரணமா.?

சுருக்கம்

Etharkum thuninthavan: எதற்கும் துணிந்தவன், தமிழகத்தில் மட்டுமே தற்போது வரை சுமார் 37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


சூர்யாவின் நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியாவாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

கடந்த 2019ம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில், கடைசியாக காப்பான் படம் திரையரங்கில் வெளியாகி இருந்தது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. 

சூர்யாவின் 40 வது திரைப்படம்:

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, சூர்யாவின் 40வது திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்துக்கு, இமான் இசையமைத்துள்ளார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை:

தமிழகத்தை நடுநடுங்கவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படம் என்பதால் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில், பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்றது. ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக ரிலீசான இப்படத்தை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினர். 

வசூல் குறைய காரணம் என்ன..?

இருப்பினும், பண்டிகை நாட்கள் இல்லாத காரணத்தால், படத்தின் வசூல் குறைவாக உள்ளதாம். இப்படம் தமிழகத்தில் மட்டுமே தற்போது வரை சுமார் 37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவிற்கு மிக பெரிய வீழ்ச்சியா?

படத்தின் வெற்றிக்கு, இன்னும் 13 கோடிகள் வரை தேவை என்பதால் படம் கண்டிப்பாக தோல்வியை தான் தழுவும் என்று சொல்லப்படுகிறது.சூர்யாவின் படம் தியேட்டரில் 8வது முறை தோல்வி, சூர்யாவிற்கு மிக பெரிய வீழ்ச்சியை தந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், சூர்யாவின் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகும், வாடிவாசல் படம் இதற்கெல்லாம் பதிலடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...Etharkkum Thunindhavan: வலிமை படத்தின் வசூலை, ஒரு வாரத்தில் எட்டி பிடித்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!