Nadigar sangam election : விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் காலை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது வெற்றி நிலவரம் வெளியாகி உள்ளது.
நடிகர் சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் மாதம் 23-ந் தேதி நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை
பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நடிகர் ஏழுமலை என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டதைத் தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
பாண்டவர் அணி வெற்றி
இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் காலை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். தற்போது வெற்றி நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர். மீதமுள்ள பதவிகளிலும் பாண்டவர் அணியே முன்னிலையில் உள்ளதால், நடிகர் சங்க தேர்தலில் அனைத்து பதவிகளையும் அந்த அணியே கைப்பற்றும் சூழல் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகர் சங்க தேர்தலில் தில்லுமுல்லு... 138 ஓட்டுகள் அதிகமானது எப்படி? - பாக்யராஜ் அணியினர் பரபரப்பு புகார்