Jfw award: விருதுகளை குவித்த நெற்றிக்கண் படம்...நயன் வராததால் சிங்கிளாக வந்து அவார்டுகளை அள்ளிச்சென்ற விக்கி

By Anu KanFirst Published Mar 20, 2022, 2:12 PM IST
Highlights

Jfw movie awards 2022: நயன்தாராவுக்கு நெற்றிக்கண் திரைப்படத்திற்கு,சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர், சமீப காலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவரின் மவுஸு கொடி கட்டி பறக்கிறது. இவருக்கு, பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

நயன்தாராவின் ஆரம்ப கால பயணம்:

தமிழ் சினிமாவில், கடந்த 2005 ஆம் ஆண்டு சரத்துக்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நயன்தாரா. அந்த திரைப்படத்தில், கிராமத்து கதாபாத்திரத்தில் ஏற்று கட்சிதமாக நடித்திருப்பார். இவர், தமிழ் மட்டுமின்றி,  தெலுங்கு மலையாளம் மொழிகளிலும் நடிகையாக சுற்றி திரிந்தார்.

கவர்ச்சிக்கு ஓகே சொன்ன நயன்தாரா:

ஆரம்பத்தில், குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த நயன்தாரா, சிம்புவுடன் இணைந்து வல்லவன், ஈ, அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். இதையடுத்து, சர்சையில் சிக்கிய நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் எழுந்து வந்து, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் ஹிட் கொடுத்தார். 

சோலோ ஹீரோயியாக வலம் வந்த நயன்தாரா:
 
திரையுலகில் 10 வருடம் அனுபவம் பெற்ற  நயன்தாரா, படம் முழுவதும் சோலோ ஹீரோயியாக வலம் வந்த, வித்யாபாலன், கங்கனா உள்ளிட்ட கதாநாயகிகளுக்கு இணையாக பாலிவுட்டை கலக்கினர். தமிழில், சோலோ ஹீரோயியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தன.

மேலும் படிக்க,,,,Valimai movie fourth week: 4வது வாரமும் வீர நடை போடும் அஜித்தின் வலிமை..வெற்றி களிப்பில் ரசிகர்கள்..!

நெற்றிக்கண் திரைப்படம்:

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ம் தேதி மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயந்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்த திரைப்படம் நெற்றிக்கண். OTT யில்  வெளியான இத்திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார். இதில், பார்வையற்ற இளம்பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் வெவ்வேறாக கருத்துக்களை பெற்றது. 

JFW  திரைப்பட விருதுகள்:

ஆங்கில பத்திரிகையான JFW, கடந்த 2019 ம் ஆண்டு முதல், தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் சிறந்த படைப்புகளுக்கும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கி ஆண்டுதோறும் பெருமைப்படுத்தும்.

அந்த வரிசையில், தற்போது JFW  திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், நயன்தாராவுக்கு  நெற்றிக்கண் திரைப்படத்திற்கு,சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. மற்றும் நெற்றிக்கண் திரைப்படத்திற்கு, சிறந்த பெண்ணை மையப்படுத்தி கதை விருது கிடைத்துள்ளது. இந்த விருது விழாவிற்கு, நயன்தாரா வராததால், விக்னேஷ் சிவன் வந்து வாங்கி சென்றார். 

The award for the Best Actress in a Women-centric film was bagged by Nayanthara!
Received the award on her behalf!

Our co-founder
Presented the award ❤️ pic.twitter.com/RGoxGTNqDi

— JFW (@jfwmagofficial)
click me!