Master movie Actress : மெசேஜ் அனுப்பி படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்... மாஸ்டர் பட நடிகை அளித்த ‘நறுக்’ பதில்

By Asianet Tamil cinema  |  First Published Mar 21, 2022, 8:40 AM IST

Master movie Actress : ஒரு கல்லூரி பேராசிரியர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குறிப்பிட்டு மாஸ்டர் பட நடிகை வெளியிட்டுள்ள பதிவைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சூப்பர் சிங்கர் டூ மாஸ்டர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் செளந்தர்யா. இதையடுத்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் விக்னேஷ் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பாப்புலர் ஆன இவர், கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இன்ஸ்டாகிராமில் அத்துமீறிய நபர்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் செளந்தர்யா, அதில் புகைப்படங்கள் பதிவிடுவது, ரீல்ஸ் வீடியோக்கள் போடுவது என பிசியாக இருப்பார். அண்மையில் இவர் வெளியிட்ட பதிவு மிகவும் வைரல் ஆனது. ஏனெனில் அந்த பதிவில் ஒரு கல்லூரி பேராசிரியர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார் செளந்தர்யா.

வெளிச்சம் போட்டு காட்டிய செளந்தர்யா

அந்த பேராசிரியர் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ள செளந்தர்யா, அந்த நபரின் பக்கத்தை பார்த்ததில் அவர் மதுரையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் என காட்டுவதாக தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம் பயிலும் மாணவிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என கொச்சையாக பேசிய அந்த நபருக்கு அவர் பாணியிலேயே நறுக் என பதிலளித்துள்ளார் செளந்தர்யா. அதுமட்டுமின்றி அந்த நபரை பிளாக் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அத்துமீறிய நபரை வெளிச்சம் போட்டு காட்டிய நடிகை செளந்தர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Prabhas : என்ன ஒரு தாராள மனசு... படம் பிளாப் ஆனதால் சம்பளத்தை திருப்பிகொடுத்த பிரபாஸ் - அதுவும் இத்தனை கோடியா?

click me!