Nadigar Sangam Election: நடிகர் சங்க தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றி பெற்றனர்.
2019 இல் ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணிக்கை,நேற்று நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் வெற்றி பெற்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம்:
undefined
தென்னிந்திய நடிகர் சங்கம் என்று ஒன்று சென்னையில் உள்ளது. முன்னதாக, விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்து வந்த நிலையில், அவர் பதவி விலகியதை அடுத்து, நடிகர் சங்கத்தில் தலைவராக மூன்று முறை சரத்குமாரும், ராதா ரவி செயலாளராகவும் இருந்தனர். இவர்கள், நடிகர் சங்க இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்ட நிலையில், இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற குற்றசாட்டை முன் வைத்து விஷால் அணி வாக்குவாதம் செய்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல்:
இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் அணி களமிறங்கியது. விஷால் செயலாளராகவும், நாசர் தலைவியாராகவும், கார்த்தி பொருளாளராகவும், கருணாஸ், பொன்வண்ணன் துணை தலைவர்களாகவும் போட்டியிட்டனர். இறுதியில், இந்த தேர்தலில் விஷால் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலாளராக பதவி ஏற்றது.
இரண்டாவது முறையாக தேர்தல்:
2015 தேர்தலின் செயற்குழு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. இந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி, மற்றும் பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர் போட்டியிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு:
ஆனால், தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என உத்தரவிட்டதைத் தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
பாண்டவர் அணி வெற்றி:
இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் காலை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். அதன்படி, பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் இறுதியில் வெற்றி பெற்றனர்.
வெற்றி களிப்பில் கார்த்தி:
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலின் வெற்றி குறித்து பேசிய கார்த்தி, எங்களுக்கு கிடைத்த வெற்றி சாதராண வெற்றி கிடையாது. நடிகர் சங்க கட்டிடத்தை முடிப்பதே எங்கள் முதல் பணி. தபால் வாக்குகளில் ஏற்பட்ட குழப்பங்கால் குறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து பயணிப்போம். நடிகர் சங்கத்தில் நிறைய நிதி சிக்கல் உள்ளது. முதலமைச்சரை விரைவில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.