
பிரபல மாடலும் நடிகையுமான சோனிகா சவுஹன் கார் விபத்தில் மரணமடைந்தார்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரபல மாடலான சோனிகா சவுஹன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற “Miss Diva” போட்டியிலும் பங்கேற்றவர். மேலும் அதே ஆண்டுக்கான “Miss Popular” விருது வென்றவர்.
கொல்கத்தாவின் மிக பிரபலமான மாடலான இவர் “ப்ரோ கபடி லீக்” போட்டியின் தொகுப்பாளினி ஆவார்.
இந்நிலையில் இன்று காலை சோனிகா தன் சக நடிகரான விக்ரம் சாட்டர்ஜியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி லேக் மால் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் புகுந்தது.
அதிகமான வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சோனிகா சவுஹன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் காரில் இருந்த விக்ரம் சாட்டர்ஜி பலத்த காயங்களுடன் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோனிகாவின் மறைவுக்கு நடிகர்கள், மாடல்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.