சீரியல் நடிகைகள் அதிகம் அட்ஜஸ்ட் பண்ணனுமா..? ஒரு பார்வை...

 
Published : Apr 29, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
சீரியல் நடிகைகள் அதிகம் அட்ஜஸ்ட் பண்ணனுமா..? ஒரு பார்வை...

சுருக்கம்

serial actress life and movie actress life

சினிமா சீரியல் என்று பெண்கள்  நடிக்க வந்து விட்டாலே அவர்களை வேறு விதமாக தான் பார்க்கின்றனர் பலர்.

அதற்கு காரணம் நடிகைகள் பலர் நாகரீகம் என்று கூறி ஆடை குறைப்பு, ஆபாச புகைப்படம் வெளியிடுவது, லிவிங் டு கெதர் என தமிழ் கலாச்சாரத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதுதான்.

சமீப காலமாக, வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் ஒரு சில நடிகைகள்,  பட வாய்ப்பு தரவேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அழைப்பதாக  கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

திரைப்படத்தில் நடிக்க தனக்கு திறமை இருந்தும், இப்படி அழைத்ததால் நான் மறுத்ததால் பல படங்களில் நிராகரிக்கப்பட்டேன், என மலையாள முன்னணி நடிகை பார்வதி கூறி இருந்தார்.

இதே போல கோலிவுட் திரையுலகை சேர்ந்த, நடிகை சந்தியா, கஸ்தூரி  வரலட்சுமி, மற்றும்  பெண் இயக்குனர் ஒருவர். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பாவனாவின் பாலியல்  வன்முறைக்கு பின் தைரியமாக வெளியே கூறினர்.

வெள்ளித்திரையில் நிலையான இடம் பிடித்த நடிகைகளுக்கே இந்த நிலை என்றால் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளை இந்த காம கொடூரர்கள் விட்டு வைப்பார்களா என்ன...! ஆனால் காமகொடுரனின் ஆசைக்கு இணங்கியாவது வெள்ளித்திரையில் வலம் வர வேண்டும் என்று ஒரு சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் போகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் குறைவு தான். ஒரு சில நடிகைகள் சபலத்தின் காரணமாக தனது வாழ்கையை ஒரு சிலரிடம் பறிகொடுத்தும் விடுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் புகழுக்கும் அடிமையான சீரியல் நடிகைகள் ஆடம்பர வாழ்கையை விட மனதில்லாமல் பலரிடம் தன் கற்பை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளபடுகின்றனர் என்பது தான் உண்மையிலும் உண்மை.

இதற்கு உதாரணம், மறைந்த சின்னத்திரை நடிகை சபர்ணா, மற்றும் காசுக்காக தெருவிற்கு வந்த வாணி ராணி சீரியல் நடிகை சமீரா ராய் போன்றவர்கள்.

ஆனால் சின்னத்திரையிலும் , வெள்ளி திரையிலும் உண்மையான திறமையோடு நடிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு , ஆசை வார்த்தை என்னும் மகுடிக்கு மயங்காமல் இருந்தால்... வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி, நல்ல பெயரோடு நிச்சயம் ஜெயிக்கலாம்.... இதுதான் உண்மை....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?