“மாஸ்டர்” சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா?... அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அதிரடி பதில்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 4, 2020, 1:17 PM IST
Highlights

ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மாஸ்டர் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு வெளியாக வேண்டிய படத்தை 2021ம் ஆண்டில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கொரோனாவால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க: பாகுபலியையே பந்தாடிய சூர்யா... “சூரரைப் போற்று” வசூல் எத்தனை கோடி தெரியுமா?

தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும், பார்வையாளர்கள் கூட்டம் பெரிதாக வரவில்லை. இந்நிலையில்,  மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தீயாய் பரவிய தகவல் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ​ஆனால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் ஓடிடி விற்பனைக்காக பேச்சுவார்த்தை நடப்பது உண்மை தான் என்றாலும், தியேட்டர் ரிலீசுக்குப் பிறகே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யவோம் என உறுதி அளித்தனர். மேலும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை திரையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா?

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிக்கான சிறப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மாஸ்டர் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு  பதிலளித்த அமைச்சர், மாஸ்டர் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரினால் அனுமதி அளிக்க தயார் என்றும், மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்த தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் விஜய்க்கு நன்றியையும் தெரிவித்தார். 

click me!