விமல் - வரலட்சுமி ஹாப்பி அண்ணாச்சி... தடைகளை தகர்ந்து படம் வெளிய வந்தாச்சு...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 4, 2020, 12:46 PM IST
Highlights

இந்நிலையில் விநியோக பிரச்சனை தொடர்பாக மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

ஜி.பூபதி பாண்டியனின் ‘மன்னர் வகையறா' படத்திற்குப் பிறகு விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கன்னிராசி'. அறிமுக இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா மற்றும் புதுச்சேரி'க்கான விநியோக உரிமை 'மீடியா டைம்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். 

 

இதையும் படிங்க: இது அனிகாவா? இல்ல பார்பி பொம்மையா?... தோழிகளுடன் வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்...!

ஆனால், ஒப்பந்தத்தின் போது உறுதி அளித்ததை போல 2018-ஆம் ஆண்டுக்குள் படத்தை ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. இந்நிலையில், 'கன்னி ராசி ' திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மீடியா டைம்ஸ்  நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், இந்த படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி விநியோக உரிமை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

 

இதையும் படிங்க: பாகுபலியையே பந்தாடிய சூர்யா... “சூரரைப் போற்று” வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இதற்காக படத்தின் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு ரூ.17 லட்சத்தை கொடுத்துள்ளோம் . ஆனால், ஒப்பந்தத்தின்படி கடந்த 2018-ஆம் ஆண்டுக்குள் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவும் இல்லை, அதே நேரத்தில்  விநியோக உரிமை வேறொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  எனவே எங்களிடம் வாங்கிய 17 லட்சம் தொகையை வட்டியுடன் சேர்த்து கொடுக்கும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

 

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'கன்னி ராசி' திரைப்படம் வெளியாக இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விநியோக பிரச்சனை தொடர்பாக மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கன்னிராசி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 
 

click me!