பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Published : Dec 04, 2020, 11:33 AM IST
பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

சுருக்கம்

'குறத்தி மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திருச்சியில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   

'குறத்தி மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திருச்சியில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980 களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.  குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகமானாலும், கே.பாலசந்தரின் அரங்கேற்றம் தான் இவரை அடையாளப்படுத்தியது.

பின்னர் பாராதாவிலாஸ், சொல்லத்தான் நினைக்கிறன், பணத்துக்காக, சினிமா பைத்தியம்,என பல படங்களில் நடித்துள்ளார். திரைப்பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் கணேஷ் என்பவரை 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அம்ரீஷ் என்கிற மகனும் உள்ளார். சில படங்களில் நடித்துள்ள அம்ரீஷ், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் இன்று திருச்சியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர் ஏன் இறந்தார் என்கிற தகவல் வெளியாகவில்லை. எனினும் ஜெயசித்ராவின் கணவர் திடீர் மறைவுக்கு மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!