வாய்ப்பே இல்லை...! 'மாஸ்டர்' படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அதிரடி..!

Published : Sep 23, 2020, 12:28 PM IST
வாய்ப்பே இல்லை...!  'மாஸ்டர்' படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அதிரடி..!

சுருக்கம்

'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பிரத்தியேக பேட்டியில் அதற்க்கு வாய்ப்பே இல்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.  

'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பிரத்தியேக பேட்டியில் அதற்க்கு வாய்ப்பே இல்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: "ராஜா ராணி" படத்தில் ஆர்யாவிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!
 

'கைதி' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகளும் நடந்து முடிந்துள்ளது. எனவே இந்த படத்தை காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனால் இருதரப்பு ரசிகர்களும் படத்தை காண ஆவலுடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்:டேட்டிங் சென்றுள்ள யாஷிகா ஆனந்த்..! அவரே வெளியிட்ட புகைப்படம்... பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்..!
 

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் "மாஸ்டர்" திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மார்ச் மாதமே மூடப்பட்டது. தற்போது படிப்படியாக ஷூட்டிங் துவங்குவதற்கான தளர்வுகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்திருந்தாலும், திரையரங்குகள் திரைப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால், தொடர்ந்து படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதால், பிரபல ஓடிடி நிறுவனம் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரை அணுகியதாகவும் இதனால், ஓடிடி தளத்தில் படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக சில தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து, பிரபல செய்தி நிறுவனத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் பேட்டியில், 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும். திரையரங்குகள் திறக்க பட்ட பிறகே வெளியாகும் என தெரிவித்துள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!