தளபதியின் வெறித்தனமான ஆட்டம்... பொறி பறக்கும் 'மாஸ்டர்' பட மேக்கிங் வீடியோ..!

Published : Jan 17, 2021, 02:15 PM IST
தளபதியின் வெறித்தனமான ஆட்டம்...  பொறி பறக்கும் 'மாஸ்டர்' பட மேக்கிங் வீடியோ..!

சுருக்கம்

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியானது. தியேட்டர்களில் முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டது. 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டின் வெற்றியாளர் முதல்... 5 ஆவது இடத்தை பிடித்ததை போட்டியாளர் வரை..! வரிசை பட்டியல் இதோ..!
 

இதனால் முதலில் விஜய் ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், தற்போதைய நிலவரப்படி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாஸ்டர் திரைப்படம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 50 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது. 

மேலும் செய்திகள்: உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்..! அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..! புரோமோ
 

எனவே போகி பண்டிகை அன்று அதிகாலை 4 மணி முதலே தியேட்டர்கள் களைகட்ட ஆரம்பித்தது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தியேட்டர்களை தெறிக்கவிட்டனர். மாஸ்டர் படக்குழுவினரும் சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர். 

மேலும் செய்திகள்: படம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ! சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்!
 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோரின் தியேட்டர் விசிட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் தளபதி விஜய்யும் அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் ரசிகர்களின் FDFS கொண்டாட்டத்தில் பங்கேற்ற சில விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்..! அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி..!
 

இதை தொடர்ந்து தற்போது மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழுவினர், 'மாஸ்டர்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில்  தளபதியின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பொறி பறக்கும் டான்ஸ் காட்சிகளிலும் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோ இதோ...


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!