
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. சண்டை, சச்சரவுகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நல்லபடியாக ஓடியுள்ளது.
16 போட்டியாளர்களுடன் துவங்கி, இரண்டு வயல் கார்டு போட்டியாளர்களின் திடீர் விசிட் என எதிர்பாராத பல திருப்பங்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நகர்ந்தது. மேலும் அன்பு குரூப் அட்ராசிட்டி, சுரேஷ் தாத்தாவின் குசும்பு, கண்ணு குட்டி அனிதாவின் அழுகை மற்றும் கோபம், எதற்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்ட பாலா, ஒரு முறை அட்வைஸ் செய்து விட்டு ஆரி பட்ட பாடு என இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு லெவலில் பார்க்க பட்டது.
ஒருவழியாக இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், மூன்று மாதங்களை கடந்து தற்போது இறுதி நாட்களை எட்டி உள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்குமே உள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதத்தில், தற்போது புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
வண்ண மின் விளக்குகள் ஒளிக்கு நடுவே சிரித்து கொண்டே நடந்து வருகிறார் கமல். பின்னர் தன்னிகரற்ற பட்டத்தை சூடப்போவது யார்? என்று ஃபைனலுக்கு செல்ல உள்ள ஐந்து போட்டியாளர்களின் குதூகல டான்ஸ் காட்டப்படுகிறது. உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன் என்றும், வெற்றியாளர்களை அறிவிக்கப்போகும் நாள் இன்று என கமல் கூறுவதும் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.