நானா படேகர் மீதான தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகார்! விசாரிக்க தயார் என்கிறது மராட்டிய அரசு!

By manimegalai aFirst Published Oct 5, 2018, 12:18 PM IST
Highlights

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் விவகாரத்தில் நானா படேகருக்கு ஆதரவு தெரிவித்த மகாராஷ்டிர அமைச்சர் தற்போது, நடிகை புகார் அளித்தால் போலீசார் விசாரிப்பார்கள் என்று திடீர் பல்டி அடித்துள்ளார்.

[12:09 PM, 10/5/2018] Vinoth Asianet: இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் விவகாரத்தில் நானா படேகருக்கு ஆதரவு தெரிவித்த மகாராஷ்டிர அமைச்சர் தற்போது, நடிகை புகார் அளித்தால் போலீசார் விசாரிப்பார்கள் என்று திடீர் பல்டி அடித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு, ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, பிரபல நடிகரான நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் ரீதியாக சீண்டியதாகவும்  நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார்.

இது இந்திய திரைப்பட வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நானா படேகருக்கு ஆதரவாகவே பெரும்பாலானோர் குரல் கொடுத்து வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை பாலியல் புகார் தெரிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய பலர், விளம்பரத்திற்காகவே தனுஸ்ரீ தத்தா இவ்வாறு கூறியுள்ளார் என்றும் அவர் மீதே குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா விவகாரத்தில், நடிகர் நானா படேகரையே தாம் ஆதரிப்பதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரான தீபக் கேசர்கர் கூறினார். இதற்கு நடிகை தரப்பிலும், அவரது ஆதரவாளர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், மாநிலத்தின் புகழ்பெற்ற ஆளுமையாக விளங்கும் நானா படேகர் புகழை சீர்குலைப்பதற்காக தனுஸ்ரீ தத்தா இதுபோன்ற புகார் கொடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் தமது உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு வழங்கி, சிறந்த சமூக சேவகராக விளங்கும் நானா படேகர் இதுபோன்ற நடவடிக்கைகளில் எல்லாம் ஈடுபடமாட்டார்; இது நடிகையின் போலிப் பிரச்சாரம் என்றும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை நடிகை மீது வைத்தார். இது இந்தி திரைப்பட உலகில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நானா படேகர்  விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு, ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பெண்ணிய ஆதரவாளர்களும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டினர். இந்நிலையில்,  தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிர அமைச்சர் தீபக் கேசர்கர், மிகப்பெரும் ஆளுமையான நானா படேகரின் புகழை இதுபோன்ற சம்பவங்களால் மறைத்து விட முடியாது என்ற போதிலும், நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்தால் உரிய முறையில் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் நானா படேகருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா அரசு செயல்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

click me!